விருதுநகர் பகுதியில் 120 மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு

விருதுநகர்: நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி... விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 நன்றாகப் படித்த 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நீட் நுழைவுத் தேர்வுக்கான விடுதி, உணவு வசதியுடன் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள்எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழிகாட்டி, ஊக்குவிப்பதற்காக, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்து வரும் சுமார் 4 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? என்றும் விளக்கம் அளித்துள்ளார் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.