நேபாளம் சார்பில் இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடை

இலங்கை: இலங்கைக்கு நேபாளம் சார்பில் நன்கொடையாக மருந்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் மைத்திரி தேரரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சர்வதேச லயன்ஸ் கழக 306 C 2 பலாங்கொடை கிளையின் கோரிக்கைப் பிரகாரம் இந்த மருந்துப் பொருட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.


சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரேஷா பத்திரகே மற்றும் சர்வதேச லயன்ஸ் கழக 306 C 2 முன்னாள் லயன்ஸ் தலைவர் லசந்த குணவர்தன, ஏ.பி ஜகத்சந்திர, டபிள்யூ.கே.என் விஜேசூரிய, சுனில் ஒபேசேகர, சிங்ஹ சமன் குமார ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அங்கத்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.