WhatsApp-ல் இனி வர இருக்கும் புது அம்சம்

இந்தியா: உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் WhatsApp செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

மேலும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது..இதையடுத்து இந்நிலையில் WaBetaInfo ஆனது WhatsApp-இல் புதியதாக வரவிருக்கும் அம்சங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, Desktop app வாயிலாக WhatsApp-ல் நீங்கள் மேற்கொண்ட அழைப்புகளை சரிபார்ப்பதற்கான வசதிகள் கொண்டு வர உள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக நீங்கள் சுலபமாக call history-ஐ சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும் இது போன்று மற்றொரு அம்சத்தை கொண்டு வர உள்ளது. அதாவது WhatsApp-ல் ‘Screen Lock’ என்ற புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. இதில் பயனாளர் WhatsApp-ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகே WhatsApp-க்குள் நுழைய முடியும். இதனால் உங்களின் WhatsApp-ஐ உங்களின் அனுமதியின்றி யாராலும் பயன்படுத்த முடியாது. இந்த அம்சத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.