வாட்ஸ் அப் பின் பயனர்களுக்கான புதிய அம்சம்

இந்தியா: உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி தினந்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் whatsapp குரூப்பில் இணையும் நபர்களின் எண்ணிக்கை 1,024 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து Business whatsapp செயலியை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ் அப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை மெட்டா வழங்கியது.அதன் தொடர்ச்சியாக தனியுரிமைக் கொள்கையை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அனுப்பப்படும் புகைப்படங்கள் , வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் ,ரெகார்ட் செய்வதற்கான ஆப்ஷனை நீக்கியது.

மேலும் அது மட்டுமல்ல டெலிகிராம் , இன்ஸ்டாகிராம் செயலிகளை போல சாட்களில் எமோஞ்சிகள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தையும் புதிய அவதார் உருவங்களை வடிவமைக்கும் வசதியையும் பயனர்களுக்கு வாட்ஸ்அ ப் அளித்தது.

இதையடுத்து இந்த அப்டேட்டுகளுக்கு மத்தியில் தற்போது புதிதாக Kept என்ற அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. எனவே இதன் மூலம் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் முக்கியமாக தோன்றினால் அதனை டெலிட் ஆகாத வண்ணம் பார்த்து கொள்ளலாம். அதாவது “Kept” என்ற ஆப்ஷன் மெசேஜ் செய்யுமிடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது Wabetainfo தளத்தில் மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.