வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டிடம் நாளை திறப்பு

புதுடில்லி: நாளை திறந்து வைக்கிறார்... அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இந்த ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் தொடக்க விழாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

40,837 சதுர மீட்டர் பரப்பளவில், 1,200 பயணிகளை திறம்பட கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய கட்டிடம் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த முனைய கட்டிடமானது அந்தமான் நிகோபர் தீவுகளின் தனித்துவமான புவியியல் மற்றும் இயற்கை அழகை பிரதிபலிக்கும் வகையில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பும் வகையில் இரண்டு அடுக்குகளாக இந்த புதிய முனையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.