WhatsApp செயலியின் புதிய அப்டேட்

இந்தியா: உலகம் முழுவதும் WhatsApp செயலியை பல பில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது drawing கருவியில் 3 புதிய அம்சங்கள் அறிமுகமாக உள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது.

இதனை தூது இது தொடர்பாக WaBetaInfo வெளியிட்ட அறிக்கையில், இதில் முதலாவது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீங்கள் டைப் செய்யும் போது Keyboard-க்கு மேற்புறத்தில் உங்களுக்கு பிடித்த Font Style-ஐ தேர்வு செய்து கொள்ளவதற்கான வசதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று உங்களின் மெசேஜை வலது, இடது, மையம் போன்றவற்றில் ஒன்றை தேர்வு செய்து Align செய்வதற்கான அம்சமும் அறிமுகமாக உள்ளது.

இதையடுத்து, உங்களின் text background-ஐ சுலபமாக மாற்றுவதற்கான வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் முக்கியமான மெசேஜை தெளிவுப்படுத்தி காண்பிக்க முடியும்.