தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய நலத்திட்டம்

சென்னை: தமிழகத்தில் அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு எண்ணும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

அதன் பின் தற்போது 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்க்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் காலையிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பயில கூடிய மாணவர்கள் காலையில் விரைவாக பள்ளிக்கு செல்ல வேண்டியதால் காலையில் உணவு சாப்பிடுவது இல்லை என தகவல் வெளியானது. மேலும் பள்ளிக்கு வெகு தொலைவில் உள்ளதால் உரிய நேரத்தில் செல்ல காலை உணவை தவிர்த்து செல்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளிலேயே உணவு தர முடிவு செய்யப்பட்டு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதையொட்டி முதல் கட்டமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி தற்போது காலை சிற்றுண்டி திட்டம் 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இனி பள்ளிகளில் காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனை சுய உதவி குழுக்கள் மூலம் சிற்றுண்டி சமைத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.