இலங்கைக்கு செல்லும் தங்கள் குடிமக்களுக்கு நியூசிலாந்து வெளியிட்டுள்ள ஆலோசனை

நியூசிலாந்து: பயண ஆலோசனை... இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை நியூசிலாந்து இந்த வாரம் புதுப்பித்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள நியூஸிலாந்து, இலங்கையை நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு வைத்துள்ளது.

இதன்படி பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் பயங்கரவாத அபாயம் போன்றவற்றின் தாக்கங்கள் காரணமாக நியூசிலாந்து நாட்டவர்கள் இலங்கையில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள், பெரிய கூட்டம் மற்றும் வரிசைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.

ஊரடங்குச் சட்டம் உட்பட உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் எந்த அறிவுறுத்தல்களுக்கும் இணங்கவும். உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களைக் கண்காணிக்கவும், தனிப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி விழிப்புடன் இருங்கள் என்று நியூசிலாந்து அரசாங்கம் தனது புதுப்பிப்பில் கூறியுள்ளது