குஜராத் அரசு உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

குஜராத் : குஜராத் அரசு உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமங்கள் தோறும் உள்ள ஏழை மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு இந்த திட்டம் பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் குஜராத் மாநில அரசு தீபாவளி பரிசாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல CNG மற்றும் PNG எரிவாயு விலையை 10% குறைப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.