எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது

திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவினால் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுத்தேர்தல் சில மாதங்களிலேயே நடக்க உள்ளதால் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், 8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என கூறிய அவர், 8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவினால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.