இனி ரூ.1000 உரிமைத்தொகை கிடையாத?

சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இது மட்டுமல்லாமல், உரிமை தொகை வழங்குவது மறுக்கப்பட்டால் உடனடியாக அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


எனவே இதன் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தங்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, குடும்பத் தலைவிகளுக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் உரிமைத்தொகைக்கான திட்டப் பணிகள் இன்று முதல் முழுமையாக புறங்கணிக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த திட்ட பணிகளை எதிர்த்து போராட்டத்திலும் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் ரூ. 1000 உரிமைத் தொகை இனி கிடைக்காதா என்று குடும்ப தலைவிகளின் மத்தியில் பதட்டம் நிலவி கொண்டு வருகிறது.