வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை; அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு

யாருக்கும் பாதிப்பு இல்லை... வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் எல்லைகள் அனைத்தும் ஜூலை மாதம் முதல் மூடப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வடகொரியாவில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே கிம் சொல்லி வருகிறார்.

அதோடு வடகொரியாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறிகள் இருந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற தகவலும் உண்டு. இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 3 கோடியே 72 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 10 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 2 கோடியே 79 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.