ட்விட்டரில் பதிவிடும் எழுத்துக்களின் உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்

இந்தியா: Character Limit 4000 ஆக உயர்த்தப்பட உள்ளது .... எலான் மஸ்க் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு ட்விட்டர் நிறுவனத்திலும் செயலியிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. அதில் முதல் கட்டமாக ஊழியர்கள் பதவி நீக்கம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பாக ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி மாதம் சுமார் 700 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் பதிவிடும் எழுத்துக்களின் உச்ச வரம்பு 4000 ஆக மாற்றப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ட்விட்களின் Character எண்ணிக்கை 140 ஆக இருந்தது. அதன் பின் ட்விட்டரில் எழுத்து உச்ச வரம்பு எண்ணிக்கை 240 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து இந்த நிலையில் பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எழுத்துக்களின் உச்ச வரம்பு 240 லிருந்து 4000 உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.