ரொறன்ரோ மக்கள் குரங்குமை தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

கனடா: ரொறன்ரோ பிரஜைகள் குரங்குமை தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரை சேர்ந்தவர்கள குரங்கம்மை தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை தடுப்பூசி ஏற்றுக்கொள்ள தகுதியானவர்கள் இவ்வாறு முன் பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார பதிவு முறைமையின் கீழ் இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாற்று பாலினத்தவர்கள், அரவாணிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஒன்றக்கும் மேற்பட்டவர்களுடன் மூன்று வார காலத்திற்குள் பாலுறவு பேணியவர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு தடுப்பூசி ஏற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் 478 பேர் குரங்கமை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 75 வீதமானவர்கள் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.