பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர கலந்தாய்வு குறித்து அறிவிப்பு

சென்னை: கலந்தாய்வு குறித்த தகவல்... பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 போ் விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனா்.

அவா்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 போ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்புப் பிரிவில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதில் முதல் சுற்று: ஜூலை 28-ஆகஸ்ட் 9, 2-ஆவது சுற்று: ஆகஸ்ட் 9-ஆகஸ்ட் 22, 3-ஆவது சுற்று: ஆகஸ்ட் 22 - செப்டம்பா் 3. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.