தமிழகத்தில் நவ. 23, 24, 25ம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கன மழை பெய்ய வாய்ப்பு ... காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான காரணத்தால் இன்று காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம்‌, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போன்று நாளை திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, இராணிப்பேட்டை மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நவ. 23, 24, 25ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் அநேக இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. மேலும் இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவித்துள்ளது

மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 தினங்களும் ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ தமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகள்‌, இலங்கை கடலோரப்பகுதிகள்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும். அதனால் இந்நாட்களில்‌ மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.