தற்போது கொரோனா பரவல், நாளுக்கு நாள் உயர்வு .. மீண்டும் ஊரடங்கு ஏற்படுமா பொதுமக்கள் அச்சம்

சென்னை: இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பு தற்போது 3 இலக்கத்தை தொட்டு விட்டது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பதிப்பின் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதை எட்டி விடும்.

அதனால், மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக சுகாதாரத்துறை பல தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயார் நிலையில் இருப்பதாகவும் கூடுதலாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இவை எல்லாம் வைத்து பார்க்கும்போது, ஊரடங்கு வருவதற்கு அதிக கால அவகாசம் உள்ளது. ஆனால், முறையான பாதுகாப்பு செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை என்றால், நிச்சயம் ஊரடங்கு வந்துவிடும். எனவே பொதுமக்களிடம் லேசாக கொரானாவின் அச்சம் தலை தூக்கம் என கணிக்கப்படுகிறது.