இஸ்ரேல் விமானங்கள் பறக்க அனுமதி அளித்த ஓமன்

மஸ்கட்: ஓமன் தனது வான்வெளியில் இஸ்ரேல் விமானங்களை அனுமதித்துள்ளதால், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான தூரம் சுமார் 2 மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல்கள் மெல்ல மெல்ல தணிந்து வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான், மொராக்கோ போன்ற அரபு நாடுகளுடன் இஸ்ரேல் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது.

இது இஸ்ரேல்-அரபு உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கிடையில், சவூதி அரேபியாவும் விரைவில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சவூதி அரேபியா தனது வான்வெளியில் இஸ்ரேலிய விமானங்களை பறக்க அனுமதித்தது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் பக்கத்து நாடான ஓமனுக்கும் தனது வான்வெளியில் இஸ்ரேல் விமானங்களை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓமானுடன் இராஜதந்திர ரீதியாக சுமூகமான உறவுகளை இஸ்ரேல் திறப்பதற்கான ஒரு படியாக இது பார்க்கப்படுகிறது. ஓமன் தனது வான்வெளியில் இஸ்ரேல் விமானங்களை அனுமதித்துள்ளதால், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான தூரம் சுமார் 2 மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் தனது வான்வெளியை பயன்படுத்த அனுமதித்த பிறகு, ஆசிய நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை இஸ்ரேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான விமானப் பயணம் பெரிதும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.