வருகிற ஏப்ரல் 17-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது. அதாவது ஈரோடு, கரூர், மதுரை நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனை அடுத்து இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் வரும் நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரம் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதற்கு மத்தியில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 17ஆம் தேதி கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல்.13 ,14, 15,16 ஆகிய தேதிகளில் தமிழக புதுவை காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.