கொரோனா தொற்றை ஒரே நிமிடத்தில் கண்டறியும் முறை

ஒரே நிமிடத்தில் கண்டறியலாம்... சிங்கப்பூரில் சுவாசப் பரிசோதனை மூலம் ஒரே நிமிடத்திற்குள் COVID-19 கிருமித்தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தெரிவித்துள்ளது.

இந்த சோதனை 180 நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பரிசோதனையில் 90 சதவீதத்திற்கும் மேல் துல்லியமான முடிவுகளை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிருமித்தொற்றுக்கான சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர், அந்த சாதனத்தின் குறிப்பிட்ட பகுதியில் ஊதவேண்டும் என்று பல்கலைக்கழகம் ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அதில் ஊதப்பட்ட சுவாச மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, அதில் வெறும் ஒரே நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NUS பல்கலைக் கழகத்தின் Breathonix உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், COVID-19 நோய்த்தொற்றை விரைவான அடையாளம் காண உதவும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது சுவாச பரிசோதனையின் முடிவுகள் உடனுக்குடன் வழங்கும் என்றும், இது சிங்கப்பூரின் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படலாம். மேலும், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்று NUS தெரிவித்துள்ளது.