தடுப்பூசியை பெற ஒன்ராறியோ மக்கள் தயங்குவதாக தகவல்

ஒன்ராறியோ மக்கள் தயக்கம்... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசியை பெற ஒன்ராறியோ மக்கள் தயக்கம் காட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ஒன்றாரியை சேர்ந்தவர் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாக தரவுகளில் தெளிவாகின்றது. ஃபைசர் தடுப்பூசியை வழங்கிய மாகாணங்களில் 100,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒன்ராறியோ கடைசி இடத்தில் உள்ளது என்பதை உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் தெரிவித்துள்ளார்.