போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்... பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் நேற்று முதல் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக உள்ளதால், பெரும்பாலானோர் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2,100 வழக்கமான பேருந்துகள் தவிர, 651 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, நள்ளிரவு வரை 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட 2,686 பேருந்துகளில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இது தவிர சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து ஆம்னி பேருந்துகளில் 20 ஆயிரம் பேரும், ரயில்களில் சுமார் 1 லட்சம் பேரும் பயணம் செய்தனர்.