எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ். விடுத்த சவால்

சென்னை: எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கிப்பிடித்தது தொண்டர்கள் தான். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு தைரியம் இருக்கா..? அவ்வாறு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார். கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தால் அது எப்போதுமே நடக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். தன்னால் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமான மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கிப்பிடித்தது தொண்டர்கள் தான். பல்வேறு சோதனைகள் கண்ட கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் இந்த கட்சியை சிற்பாக வழிநடத்தி சென்றார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு தைரியம் இருக்கா..? அவ்வாறு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார். இதற்கிடையில் கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தால் அது எப்போதுமே நடக்காது” என்று பேசினார்.