உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி கூடாரங்களில் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்

காஸா: உணவிற்கு தவிக்கிறார்கள்... இஸ்ரேல் தாக்குதலால் வீடுகளிலிருந்து வெளியேறி கூடாரங்களில் தங்கி உள்ள பாலஸ்தீனர்கள் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் வான் தாக்குதலால் வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸாவிற்கு அகதிகளாக வந்த பாலஸ்தீனர்கள், கான் யூனிஸ் நகரில் ஐ.நா. போன்ற தன்னார்வ நிறுவனங்கள் அமைத்து தந்த கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

சுமார் 35 ஆயிரம் பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம், இணைய சேவைகள் போன்ற வசதிகளின்றி தவித்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை எகிப்திலிருந்து 20 லாரிகளில் நிவாரண பொருட்கள் வந்திறங்கிய நிலையில், தினமும் 100 லாரிகளில் நிவாரண பொருட்கள் தேவை படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.