கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண குவிந்த மக்கள்

கன்னியாகுமரி: குமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

கன்னியாகுமரி;உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடலில் ஏற்படும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் இயற்கை நிகழ்வை ரசித்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சவாரி மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குமரி சுற்றுலா தலத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்..அதன்படி நேற்று முன்தினம் குமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டு, கடற்கரையில் உள்ள முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடி உற்சாகமடைந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அதிகாலையின் சூரிய உதயத்தை கண்டு செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது.