அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் அவதி

சேலம்: அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் 50 சதவீதம் வரையில் உயர்ந்து விட்டதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கட்சிக் கொடியேற்றி வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் கொடுத்த 525 அறிவிப்புகளில் எதையும் நிறைவேற்றவில்லை என கூறினார்.

மாறாக, மின் கட்டணத்தை இதுவரை 52 சதவீதம் உயர்த்தியதோடு, இனி ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்த உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.