மாநகராட்சி பகுதியில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை நாளை முதல் திறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் வரும் வழிபாட்டு தலங்களை ஆட்சியரின் அனுமதியுடன் திறக்கலாம். சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை திறக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமியை தரிசிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.