மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த மின் வாரியம் திட்டமிடல்

சென்னை: தமிழகத்தில் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் வரியா ஊழியர்கள் மின் பயனர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மின் கணக்கீடு செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த முறையில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்து கொண்டு வருகிறது.

அதாவது மின் கணக்கீட்டாளர்கள் உரிய தேதிக்குள் மின் கணக்கீடு செய்ய வருவதில்லை. மேலும் அதனை முறையாக கணக்கீடு செய்வதில்லை. இதனால் அதிக தொகையை கட்ட நேரிடுகிறது என பலர் குற்றம் சாட்டினர்.

எனவே இதை கருத்தில் கொண்டு முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் மின் மீட்டரில் சாப்ட்வேர் பதிவேற்றபட்டு மின் வாரிய சர்வருடன் இணைக்கப்படும்.

எனவே இதன் மூலம் ஸ்மார்ட் மின் மீட்டர் தானாகவே மின் கணக்கீடு செய்து விடும். மேலும் மின் கட்டணம் பயனர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டு விடும்.எனவே இதன் மூலம் முன் கணக்கீடு துல்லியமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.