எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து பிரதமர் மோடி காணொலி ஆலோசனை

புதுடில்லி: பிரதமர் ஆலோசனை... டெல்லியில் காணொலி வாயிலாக நடந்த பிரகதி கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 7 நகரங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

பிரகதி எனப்படும் மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய திட்டக் கூட்டத்தில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை உள்ளிட்ட 7 நகரங்களில் நடந்து வரும் எய்ம்ஸ் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தினார். மேலும் சாலையோர வியாபாரிகள் மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.