குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் ட்ரோன் வாயிலாக போலீசார் கண்காணிப்பு

விழுப்புரம்: ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு... விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர் பகுதிகளில் காட்டு பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது.

அதே சமயத்தில் போலீசாரும் காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, அங்கு மது அருந்தியவர்கள், பணம் சூதாடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தொடர்ந்து நடந்த கண்காணிப்பின் போது, ஆட்சிக்குப்பம் பகுதியில் சாராய விற்பனை செய்த ஜெயகிருஷ்ணன் என்பவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த சாராயத்தைக் கைப்பற்றினர்.