இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்தது

அகர்தலா: முதல் கட்டமாக இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இங்கு தேர்தலுக்காக 25,000 மத்திய படையினருடன், 31,000 மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன