கல்லூரிகளின் வளர்ச்சிக்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் .. பொன்முடி

சென்னை: சென்னையில், கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களோடு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதனை அடுத்து அவர் கூறுகையில், ‘ மாதம் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். இன்று கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார் .

மேலும், கலைஞர் ஆட்சி காலத்தில் தான் கல்லூரியில் ஷிப்ட் முறை என்பது நாங்கள் ஆரம்பித்தோம். காலை , மாலை என 2 வேளைகளில் கலை கல்லூரிகள் செயல்படுகிறது. தமிழக மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துவிடகூடாது என்பதற்காகவே இந்த ஷிப்ட் முறை கொண்டுவரப்பட்டது.

மேலும் தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கைகள் மூலம் கலோரிகளின் நிலை அறிந்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என அவர் விளக்கம் அளித்தார்.