மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுப்பு

சென்னை: மின்வாரியம் எச்சரிக்கை ... அரசு சலுகைகளைப் பெற லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பணி முடிந்து விடும் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வருகிறது. அவ்வப்போது இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மின் சேவை இணைப்புகளை வழங்குவதற்கு அதிகாரிகளும் , ஊழியர்களும் லஞ்சம் கோருவதாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்து உள்ளது.

இந்த புகாரை அடுத்து இந்த இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதோடு வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.