வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று தூத்துக்குடியில் மின்தடை

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே உள்ள அரசடி துணை மின்நிலையம், கொம்புக்கார நத்தம் மின்நிலையத்தில் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அதனால் அரசடி துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மேல அரசடி, கீழ அரசடி, சமத்துவபுரம், தருவைகுளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலும்

இதை அடுத்து வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், எட்டயபுரம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 25ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று மின்சார வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொம்புக்கார நத்தம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், ராமசாமி புரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கொல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை,

மேலும் கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.