பிரசாந்த் பூஷண் தனது கருத்துக்களை திரும்பப்பெற அரைமணி நேரம் காலஅவகாசம்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் டுவீட் செய்திருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி மற்றொரு டுவீட் பதிவிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரணை முடிவில் அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்தது. பிரசாந்த் பூஷண் தனது கருத்துக்களை முன்வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையிலும், பிரசாந்த பூஷண் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை வழங்கக்கூடாது. அவரை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

பின்னர், பிரசாந்த் பூஷண் தனது கருத்து திரும்பப்பெறவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும். இன்னும் அரைமணி நேரம் காலஅவகாசம் கொடுக்கிறோம் என நீதிபதிகள் கூறினர். ஒருவேளை அரைமணி நேரத்திற்குள் பிரசாந்த் பூஷண் தனது கருத்தை திரும்பப்பெறாவிட்டால் அவருக்கு தண்டனை வழங்கப்படலாம். ஆனால் அவர் கருத்தை திரும்பப்பெற மறுத்துவிட்டதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.