நேபாள் நாட்டின் பிரதமராக 3 வது முறையாக பதவியேற்றார் பிரசந்தா

நேபாள்: மூன்றாவது முறையாக பதவியேற்பு... நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார்.

275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாததால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலியின் சிபின் - யுஎம்எல் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா முன்னெடுத்தார்.

இதனையடுத்து, 169 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிபர் மாளிகையில் பிரசந்தா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 3 துணை பிரதமர்கள் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.