அதிபர் டிரம்பின் இளைய சகோதரர் காலமானார்; அதிபர் டிரம்ப் கவலை

அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் காலமானார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவால் நியூயார்க் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராபர்ட் டிரம்ப் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சகோதரர் மரணம் அடைந்தது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், எனது அருமையான சகோதரர் ராபர்ட் சனிக்கிழமை இரவு காலமானார் என்பதை நான் மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பர். அவரை பெரிதும் நேசிக்கிறேன், ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். என தெரிவித்துள்ளார்.

ராபர்ட் டிரம்ப் அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் இளைய சகோதரராவார். இவர் வோல் ஸ்ட்ரீட்டில் கார்ப்பரேட் ஃபைனான்ஸில் பணிபுரிந்தார் பின்னர் குடும்பத் தொழிலில் சேர்ந்தார், டிரம்ப் அமைப்பில் ஒரு உயர் நிர்வாகியாக ரியல் எஸ்டேட் பங்குகளை நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.