தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்கி ஜனாதிபதி அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அதிரடி உத்தரவு... தங்கம் மீதான 15 வீத இறக்குமதி வரியையும், இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் வருமான வரி 14 வீதத்தையும் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு முதல் மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையினால் நீக்கப்பட்டது. இதையடுத்து 2018 இல் தங்க இறக்குமதிக்கு 15 வீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் நகைகளின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், மாணிக்கம் உற்பத்தி மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனால், தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.