திருக்குறளை மேற்கோள் காட்டி புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி

அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் எனவும், உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் எனவும் பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதமர் மோடி அடிக்கடி தனது பேச்சின்போது திருக்குறளை மேற்கோள் காட்டி வருகிறார். சமீபத்தில் லடாக்கில் ராணுவ வீரர்ககள் இடையே பிரதமர் மோடி பேசியபோதும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

‘‘மறமானம் மாண்ட வழிச்செலவு தோற்றம்
எனநான்கே ஏலம் படைக்கு’’ என்ற திருக்குறளை குறிப்பிட்டு, லடாக்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியவராதல் எனும் நான்கும் கடைக்கு காவல் அரண்கள் என்பதே இந்த குறளின் பொருள்.