டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டம் நோக்கி இந்தியா நகர்வதாக பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: பிரதமர் மோடி பெருமிதம்... டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்வதாகவும், நாட்டு மக்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மேம்படுத்துவதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

பயனாளர் என்ற நிலையில் இருந்து தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இந்தியா மாறி வருவதாகவும் கூறினார்.

மேலும்,120 நாட்களில் 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் 125 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஊரகப் பகுதிகளில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.