பிரதமர் மோடி அவர்கள் வரும் 17ம் தேதி தனது 72 – வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

இந்தியா: இந்தியாவில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் 1950 ஆண்டு குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் பிறந்தார். மேலும் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

இதை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பிஜேபியில் உறுப்பினராக சேர்ந்து தனது அரசியல் பணியை தொடங்கினார். பிறகு 2001ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2ம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

இவர் அரசியலில் மட்டும் அல்ல.. புத்தகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். அதனால் சக்தி பாவ், சமூக நல்லிணக்கம், சமாஜிக் சம்ரஸ்தா போன்ற நூல்களை எழுதினார். இத்தகைய சாதனைகளை படைத்த தலைவர் பிரதமர் மோடி அவர்கள் வரும் 17ம் தேதி தனது 72 – வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

எனவே இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் 56 வகை உணவு விருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு வகைகளை 40 நிமிடங்களில் சாப்பிடுபவர்களுக்கு ரூ. 8.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடும் தம்பதிகளுக்கு கேதார்நாத் செல்ல இலவச சுற்றுலா வாய்ப்பு வழங்கப்படும் என அந்த உணவகம் தெரிவித்துள்ளது.