ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றடைந்தார்

புதுடில்லி: ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரை சென்றடைந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்த பிரதமரை, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி வரவேற்றனர்.

ஜப்பானை அடைந்ததும் பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடேவின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதாகவும், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் உலகத் தலைவர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்க உள்ளார். ஜப்பானில் பயணத்தை முடித்துக்கொண்டு பபுவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.