ஐந்து நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி

புதுடில்லி: நள்ளிரவில் தாயகம் திரும்பினார்... பிரதமர் மோடி தமது 5 நாள் அமெரிக்கா, எகிப்து பயணத்தை வெற்றிகரமாக முடித்து நள்ளிரவில் தாயகம் திரும்பினார்.

பிரதமர் மோடி எகிப்தில் இருந்து நேற்று நள்ளிரவு தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக எம்பிக்கள் உள்ளிட்டோர் மரியாதை செய்து வரவேற்றனர்

தமது எகிப்து பயணம் வரலாற்று ரீதியானது என்று மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். எகிப்து அதிபர் அப்தல் (Abdel Fattah El-Sisi) முன்னிலையில் இந்தியா எகிப்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது Order of Nile அளிக்கப்பட்டது.

ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த AL Hakim மசூதியையும் முதல் உலகப் போரில் உயிர்நீத்தோரின கல்லறையையும் மோடி நேரில் கண்டு மரியாதை செலுத்தினார்

எகிப்து பிரதமர் மொஸ்தபாவுடன் கிஸா பிரமிடுகளுக்கு சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி, முன்னதாக நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.