அனுமன் நாமத்துடன் உத்தர கன்னடா பகுதியில் பிரதமர் மோடி பரப்புரையை தொடக்கினார்

கர்நாடகா: அனுமன் நாமத்துடன் தொடக்கம்... கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைத் தடை செய்யப் போவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் பஜ்ரங்பலி என்று அனுமனின் நாமத்துடன் உத்தர கன்னடா பகுதியில் பிரதமர் மோடி நேற்று தமது பரப்புரையைத் தொடங்கினார்.

காங்கிரசின் ஊழல் கட்டுமானத்தைத் தகர்த்ததால் தம்மை அக்கட்சியினர் வசைபாடுவதாகவும், தம்மை வசை பாடும் காங்கிரசுக்குத் தக்க தண்டனையளிக்கும் வகையில் வாக்காளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார்.

பாஜகவை வீழ்த்த முடியாது என்பதால் காங்கிரஸ் வசைபாடும் அரசியலை கைப்பற்றியிருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

கர்நாடக சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 404 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் 31 சதவீதமும் பாஜகவில் 30 சதவீதமும் மதசார்பற்ற ஜனதா தளத்தில் 25 சதவீதமும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்களாக உள்ளனர்.