மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்

இந்தியா: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வேகமெடுத்த கொரோனா பெரும் தொற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் பிறகு ஓரு வழியாக கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி துவங்கியது. எனவே இதன் விளைவாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதையடுத்து அந்த சூழலில் அனைத்து நாடுகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது.


இந்த கொரோனா ஒழிந்து விட்டது என்று மக்கள் தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கிய நிலையில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் அத்துடன் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.