ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இந்தியா: பிரதமர் மோடி இரங்கல் ..... ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதையடுத்து இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து உள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து அவர், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என அவர் ட்வீட் செய்து உள்ளார்.

மேலும், ரயில்வே அமைச்சரிடம் பேசி நிலைமையை கேட்டறிந்ததாகவும். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.