நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் : தமிழகத்தில் அரசுத்துறையை தொடர்ந்து தனியார் துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது. தற்போது கொரோனா தாக்கத்திற்கு பின் அவ்வப்போது அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று கொண்டு வருகிறது.

எனவே அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பரமபத்தி வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற உள்ளது.

ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் படி இம்முகாம் நடைபெற உள்ளது.

எனவே இந்த முகாமில் ஆண்கள் , பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகமானது ஆகஸ்ட் 23ம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்மில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை அலுவலகத்தின் 04286 – 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.