நம்ம ஊரு நல்ல ஊரு திட்டத்தின் மூலம் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்

தருமபுரி: பாப்பிரெட்டிபட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குட்டைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ள பகுதியில் நம்ம ஊரு நல்ல ஊரு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பராமரிக்க ஊராட்சி மன்ற தலைவர் குமார் திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காணியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குட்டை புறம்போக்கு நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பாப்பிரெட்டிபட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமாரி கண்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 நாள் திட்ட பணியாளர்கள் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதில் அத்தி, நாவல், கொய்யா, வேம்பு, அரசன், புங்கன், மூங்கில் உள்ளிட்ட பலவகை மரங்களை நட்டனர். மேலும் இந்த மரக்கன்றுகளை 100 நாள் வேலு திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, களை பறிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு பசுமையை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்


இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் சேட்டு, மகளிர் குழுக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..