கொரோனா தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க செயற்திட்டம்

தடுப்பூசி தயாரிக்க செயற்திட்டம்... உள்நாட்டிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான செயற்திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

இதற்காக பிரதமர் ஜஸ்டின், 214 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கியூபெக் நிறுவனத்துடன் மத்திய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சுமார் 7.6 கோடி கொவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ட்ரூடோ கூறுகையில், ”இந்த நடவடிக்கையானது, கனடா மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி விரைந்து கிடைப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.

அடுத்த ஆண்டின் முதல்பாதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.