பெண் மருத்துவரை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

மனைவிக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்த ஒரு பெண் டாக்டரை, பீஸ் கொடுக்காமலிருக்க அந்த பெண்ணின் கணவரே மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் உள்ள ஒரு மகளிர் மருத்துவமனையில் ஷீலா நாயக் என்ற பெண், மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று அங்கு பிரசவத்திற்காக பானு என்ற பெண்ணை அவரின் கணவர் அழைத்து வந்தார் .அப்போது அந்த பெண்ணுக்கு அந்த பெண் டாக்டர் சிசேரியன் செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்தார் .

அதன் பிறகு ஆகஸ்ட் 20ம் தேதி இரவு, பானுவின் கணவர் அமிர்கான் பதான், மூன்று நபர்களுடன் டாக்டரின் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஆபாசமாக பேசி, அவரை மிரட்டி உள்ளார். மேலும் பிரசவம் பார்த்தற்காக மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாது. கட்டணம் கேட்டால் உங்களை கடத்தி கடத்தி நிர்வாண வீடியோ எடுப்பேன். கொலை கூட செய்ய தயங்கமாட்டோம் என்று அவர் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து பெண் டாக்டர் ஷீலா நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததற்காக அமீர்கான் பதான் மற்றும் சில நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.